Thursday, October 18, 2018

மென் நூல்கள் எதற்கு..?

                                 
                       ஒரு சிறந்த நூல் ஆயிரம் ஆசான்களுக்கு சமம் என்பார்கள்,
நல்ல நூல்கள் மனிதனை முழுமை அடைய செய்கின்றன

ஒவ்வொரு வீடுகளிலும் புத்தகங்கள் கட்டாயம் இருக்க வேண்டும். அப்போதுதான், குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். மதிப்பெண்ணுக்காக பாடப்புத்தங்களை படிப்பது அவசியம்.

அதேபோல உலக அறிவை பெறுவதற்கு, தகுதி வாய்ந்த நூல்களை தேடிப்படிக்க வேண்டும்,  புத்தகங்கள்தான் சமுதாய மாற்றத்துக்கான சாவி.

இணையமக்கபட இன்றைய நவீன காலத்தில் வாசிப்புப் பழக்கம் குறைந்துவிட்டது. வாசிப்பு குறைந்தால், வாழ்க்கையின் அர்த்தமே அகப்படாமல் போய்விடும்.

இன்றைய காலகட்டத்தில் கடையிலோ, புத்தக கண்காட்சியிலோ, நூலகத்திற்கோ  சென்று புத்தகம் வாங்குவதற்கு போதுமான நேரமும்,
வசதி குறைந்தவர்களுக்கு போதுமான பணமும் இருப்பதில்லை.


பணத்தையும் ,நேரத்தையும் மிச்ச படுத்துவதற்கும் மட்டும் அல்லாமல்
எளிமையாக கையாள்வதற்கும்
பி டி எப் வடிவிலான மென்நூல்கள் பயன்படுகின்றன

என்னதான் மென்நூல்கள் போன்ற தொழில்நுட்ப வளர்ந்திருந்தாலும் அச்சு
புத்தகங்களில் படிக்கும் சுவாரசியமும் , உணர்வுகளும்  மென்நூல்களில் கிடைபதில்லை.

எனவே முடிந்தவரை மென்நூல்கள் தவிர்ப்பது நலம்.....



                                                                                         என்றும் அன்புடன்
                                                                                          எஸ்.சரவண பிரபு...